இந்திய தபால்துறையானது வாடிக்கைகையாளர்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் தபால்துறையில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம், கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகிய காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், பாலிசிகளின் முதிர்வு தொகையானது  லட்சத்தை தாண்டினால் 5% TDS கழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஒரு வருடத்திற்கு 4.5% GSTம், ஒரு வருடத்திற்கு பிறகு 2.3% GST பிடிக்கப்படும் நிலையில், இந்த உத்தரவால் பாலிசிதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.