
பார்வை மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக கைத்தடி சுமந்து செல்லும் பார்பி பொம்மையை மேட்டல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது அறிமுகம் ஆகியுள்ள பார்வை மாற்றுத்திறனாளி பார்பி பொம்மை, வெள்ளை மற்றும் சிவப்பு கைத்தடியை பிடித்தவாறு உள்ளது.
அதன் கருவிழிகள் சற்று மேலே பார்த்தபடி பார்வை திறன் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேட்டல் நிறுவனம் இதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டு காது கேளாதவருக்கான பார்பிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சர்க்கரை நாற்காலி உடன் பார்பி பொம்மைகளை அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.