பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தனது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, சென்னை ECR-ல் பெண்களை சில இளைஞர்கள் துரத்திய விவகாரத்தில் அரசியல் தொடர்பு இல்லை. புகார் அளித்த 10 நிமிடங்களில் காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்கே சென்று விசாரித்தனர்.

FIR பதிவு செய்ததிலும் தாமதம் இல்லை. தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருகிறோம். சம்பவம் தொடர்பாக 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட யாரும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை. பாலியல் நோக்கங்களுக்காக பின் தொடரவில்லை. பார்க்கிங், சுங்கச்சாவடி பணம் செலுத்தாமல் இருக்க கொடி கட்டியுள்ளனர் என கூறியுள்ளார்.