
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் இருப்பவர் சேரன். இவர் பல படங்களை இயக்கியதோடு நடித்துள்ளார். இவர் இயக்கிய வெற்றி கொடி கட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் தேசிய திரைப்பட விருது பெற்றுள்ளது. இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, முரண், பொக்கிஷம் போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் சேரன் பாமக அரசியல் தலைவரான ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க போவதாக சில தகவல்கள் வெளிவந்தது. இந்த படத்தில் நடிகர் சரத்குமார் ராமதாஸின் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் சரத்குமார் தற்போது இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என கூறியுள்ளனர். இதனால் இந்த படம் டிராப் ஆகிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.