பொதுவாக நம்முடைய வீட்டில் ஒவ்வொரு மாதமும் வாங்கும் வீட்டு சாமான்களை பட்டியலில் குளியல் சோப்புகளுக்கும் முக்கிய இடம் உண்டு. அந்த வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்புகள், கழிப்பறை சோப்புகள் என்ற வகையில், சோப்பு கவர்களுக்கு பின்  பகுதியில் டாய்லெட் சோப் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை நம்மில் பலரும் பார்ப்பது கிடையாது .அதற்கான அர்த்தம் என்பது நமக்கு தெரியாது. கழிப்பறை சோப்பு மற்றும் குளியல் சோப்பு என்பது எதன் அடிப்படையில் வித்தியாசப்படுகிறது என்பதை பார்க்கலாம்.  மூலிகை மற்றும் விலங்கின் கொழுப்புகள் சேர்ந்த கலவையில் தான் குளியல் சோப்பு மற்றும் கழிப்பறை சோப்பு பயன்படுத்தப்படுகிறது.

வளர்ந்தவர்களுக்கு சரும துவாரங்கள் இருக்கும் அதனால் சோப்பை சருமத்தின் தன்மைக்கு ஏற்ப தேர்வு செய்ய வேண்டியது அவசியம். சருமத்தின் தன்மை தெரியாமல் மூலிகை கலந்த ஆண்டி செட்டி சோப்புகளை பயன்படுத்தினால் சருமத்தின் வறட்சி ஏற்படுவது மட்டுமல்லாமல் சருமம் கருத்து போகும். அனைவரும் பெரும்பாலும் விளம்பரங்களை வைத்து தான் சோப்புகளை தேர்வு செய்கிறோம் .ஆனால் உண்மையில் அது குளியல் சோப்பு தானா என்று பார்ப்பதை மறந்து விடுகிறோம்.

டி எஃப் எம் சதவீதம் இருப்பதை வைத்து மூன்று வகையாக வகைப்படுத்தப்படுகிறது. டி எஃப் எம் சதவீதம் 75 முதல் 80 வரை இருந்தால் அது முதல் கிரேட் 1 சோப்பு. இது அனைத்து வயதினரும்  பயன்படுத்தலாம். கிரேடு 2 இதுவே கழிப்பறை சோப்பு. அதை குளியலுக்கு பயன்படுத்துவது சிறந்தது. இதில் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் அதிகமாக இருக்கிறது. அதே சமயம் மென்மையாக சருமமுடையவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.

டி எஃப் எம் 65 முதல் 70 சதவீதம் இருந்தால் கிரேடு 3 இது பாத்திங் பார் எல்லா வயதினருக்கும் இந்த சோப் பொருந்தாது. கிரேடு 2 ,3 சோப்புகளை போல கிரேடு 1 சோப்புகள் அதிகம் விளம்பரப்படுத்தப்படுவது கிடையாது. இதனால் சோப்பு வாங்கும் பொழுது கட்டாயம் டிஎப் எம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். எனவே வாசனைக்காகவும் விளம்பரத்துக்காகவும் மாத்திரம் சோப்புகளை தேர்வு செய்து சருமத்தை கெடுத்துக் கொள்வதும் முற்றிலும் தவறானது.