மதிய வெளி விவகார மந்திரி டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் ஆஸ்திரியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அந்நாட்டின் வெளி விவகார மந்திரியான அலெக்ஸாண்டர் ஸ்காலென் பர்கை சந்தித்து பேசி உள்ளார். இந்நிலையில்  இரு நாட்டு மந்திரிகளும் இன்று கூட்டாக பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியுள்ளனர். அப்போது மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது, பயங்கரவாதத்தினால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை பற்றி ஆஸ்திரியா நாட்டு தலைவர்களுடன் பேசினேன்.

மேலும் நாங்கள் எல்லை கடந்து பயங்கரவாதம், தீவிரவாதம், வன்முறை மற்றும் அடிப்படைவாதம் போன்றவற்றைப் பற்றியும் விரிவாக பேசினோம். போதை பொருட்கள் சட்டவிரோத ஆயுத விற்பனை மற்றும் பிற வடிவிலான சர்வதேச குற்றங்கள் போன்றவை ஒன்றுடன் ஒன்று ஆழ்ந்த தொடர்பில் இருக்கும் போது மேற்குறிப்பிட்டுள்ள பயங்கரவாத விளைவுகளை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் அடக்கி விட முடியாது.

இந்த பயங்கரவாதத்தின் மையம் இந்தியாவிற்கு மிக அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய மந்திரி ஜெய்சங்கர் செக் குடியரசின் ஜன் லிபாவ்ஸ்கை மற்றும் ஸ்லோவாகியா நாட்டின் வெளியுறவு மந்திரியான ராஸ்டிஸ்லாவ் சேகர் போன்றோரையும் சந்தித்து பேசி உள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மந்திரி ஜெய்சங்கர், இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் உறவுகள் நமது அண்டை நாடுகள் இந்தோ பசிபிக் விவகாரம் மற்றும் உக்ரைனில் நடைபெற்று வரும் போர் குறித்த விஷயங்கள் பற்றி உரையாடல் மேற்கொண்டோம் என தெரிவித்துள்ளார்.