மருத்துவ காரணங்களுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது என்று பாஜக தலைவர் ஜே பி நட்டாவுக்கு நடிகை குஷ்பூ கடிதம் எழுதியுள்ளார்.

2019-ல் டெல்லியில் நடந்த விபத்தில் தனது முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெறுவதை சுட்டிக்காட்டி நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மருத்துவர்கள் அறிவுரைப்படி தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகுவதாக நடிகை குஷ்பு அறிவித்துள்ளார். நேற்று வட சென்னை தொகுதி பாஜக வேட்பாளருக்காக நடிகை குஷ்பு பிரச்சாரம் செய்திருந்த நிலையில், விலகியுள்ளார்.

சில நேரங்களில், கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் மற்றும் ஒருவரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று நான் அப்படிப்பட்ட ஒரு கட்டத்தில் இருக்கிறேன். நான் என்னை அர்ப்பணித்துள்ளேன்
பாஜக இந்தியா எங்கள் அன்புக்குரிய பிரதமரின் பாதையை பின்பற்றி வருகிறோம் நரேந்திரமோடி ஜி, தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் மூழ்கிவிட்டேன்.

ஆனால் மிகவும் துரதிர்ஷ்டவசமாக நான் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன், அதற்கு உடனடி கவனம் தேவைப்படும் எனது தொடர்ச்சியான வால் எலும்பின் காயம் காரணமாக.விரைவில் குணமடைய உங்கள் அனைவரின் ஆதரவும் நல்லெண்ணமும் தேவை, மேலும் பலவற்றைச் செய்ய மீண்டும் வருவேன் என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்காக நட்சத்திர பேச்சாளர் குஷ்பூ பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு தினங்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது பாஜகவின் தேசிய தலைவர் ஜே பி நட்டாவுக்கு ஒரு கடிதத்தினை குஷ்பூ அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் தற்போது உடல்நிலை காரணம் காட்டி பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது என்ற கருத்தினை ஜே.பி நட்டாவிற்கு தெரியப்படுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்தின் போது எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து 5 ஆண்டுகளாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது மீண்டும் அந்த பிரச்சனை ஏற்படதன் காரணமாக பிரச்சாரம் மேற்கொள்ள முடியவில்லை என  மருத்துவ காரணத்தை காட்டி பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது என தெரிவித்துள்ளார்.

இது தனக்கு துரதிஷ்டவசமான முடிவாக இருப்பதாகவும்,  இது தனக்கு ஒரு கவலை அளிக்கக்கூடிய விஷயமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த இக்கட்டான நேரத்தில் தனது பங்களிப்பை செலுத்த முடியவில்லை என மன வருத்தமாக இருப்பதாக கடிதம் மூலமாக தெரியப்படுத்தியுள்ளார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு வரை பல்வேறு தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு எலும்பு முறிவு குணமடையாத நிலையில், 5 ஆண்டுகளாக சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில் மீண்டும் வலி அதிகமாக இருப்பதன் காரணமாக பிரச்சாரத்தில் ஈடுபட போவதில்லை என நட்டாவிற்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

.