பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்குகிறார். இதற்கு முன்பு போடா போடி, தானா சேர்ந்த கூட்டம், நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது அவர் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை இயக்கும் நிலையில் அந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படக்குழு ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் சீமான் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நடித்துள்ளார். சினிமாவை விட்டு விலகி அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் சீமான்  தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு படத்தில் நடித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பாசமான அப்பாவாக சீமான் நடித்துள்ள போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.