விஜய் தொலைக்காட்சியின் நம்பர் 1 சீரியலாக மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது “பாக்கியலட்சுமி”. இத்தொடரில் கோபி கதாபாத்திரத்தில் சதிஷ் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பத்தில் அவரை மொத்த சீரியல் ரசிகர்களும் திட்டி வந்தனர். எனினும் அதற்கு பிறகு அவரது நடிப்பையும் அதிகம் பேர் பாராட்ட துவங்கினார்கள்.

இப்போது கோபி, ராதிகாவுடன் அவரது வீட்டுக்கே வந்து இருப்பது போன்று தான் சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் பாக்கியலட்சுமி தொடரை விட்டு விலகுவதாக சதிஷ் அறிவித்திருக்கிறார். இம்முடிவை எடுக்க பல காரணங்கள் உள்ளது என  அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதே நேரம் சொந்த காரணங்களுக்காக விலகுவதாக தெரிவித்து இருக்கிறார் சதிஷ். அவர் கண்கலங்கி இந்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.