இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் மோயீன் அலி, பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறந்தவர்களாக இருக்கலாம், ஆனால் உலக அளவில் மிகப்பெரிய ஆபத்தான பந்துவீச்சாளர்கள் இல்லை என கூறியுள்ளார்.

சமீபத்திய ஒரு பேட்டியில், பாகிஸ்தான் அணியின் ஷஹீன் அஃப்ரீதி, ஹாரிஸ் ரவூப், நசீம் ஷா ஆகியோரின் திறமை சிறப்பானது என்றாலும், அவர்கள் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இல்லை எனக் கூறினார். “பாகிஸ்தான் பின்னணியிலுள்ள மக்கள் இவர்களை உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் என்று கருதுகிறார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் சிறந்தவர்கள் அல்ல,” என்று மோயீன் அலி தெரிவித்துள்ளார்.

மேலும், மொயீன் அலி ஒருநாள் (ODI) கிரிக்கெட் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போது, 50 ஓவர் போட்டிகள் இப்போது மிகவும் கடுமையாக மாறிவிட்டன என்றும், ICC உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தவிர, மற்ற போட்டிகளில் இதற்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை என்றும் கூறியுள்ளார். “ODI என்பது தற்போதைய காலத்தில் மிக மோசமான வடிவமாக மாறிவிட்டது” என்று Talksport Cricket-க்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார். 2012ல் விதிகள் மாற்றப்பட்டதை குறிப்பிட்டு,  Powerplay முடிந்தவுடன் உள்சுற்று வட்டத்திற்குள் கூடுதல் வீரர்களை  அமைக்க வேண்டும் என்ற விதி தவறானது என்றும், அதனால் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க இயலாது என்றும் அவர் கூறினார்.

“இப்போது ODI போட்டிகளில் வீரர்கள் சராசரியாக 60-70 ரன்கள் அடிக்கிறார்கள். காரணம், பந்துவீச்சு செய்யும் அணிகளுக்கு அதிக கட்டுப்பாடு இல்லை. ஒரு சிறிய அழுத்தம் கொடுத்தால் கூட, பேட்ஸ்மேன்கள் தற்காலிக தந்திரங்களை பயன்படுத்தி, புதிய வியூகங்கள் வகுத்து ஆட்டம் இழக்காமல்  4  அடிக்கிறார்கள்” என்று மோயீன் அலி தனது கருத்தை விளக்கினார். இந்த பேட்டிங் ஆதரவு விதிகளால், உலகம் முழுவதும் ODI போட்டிகளின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது என்றும், நாளுக்கு நாள் இந்த வடிவம் அழிந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.