பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பின்னர், இந்தியா – பாகிஸ்தான் இடையே எழுந்த மோதலில் இந்திய ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. இதை இந்திய ராணுவம் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், தற்போது இந்திய முப்படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான் அளித்த ப்ளூம்பர்க் நேர்காணல் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நேர்காணலில், பாகிஸ்தான் கூறியவாறு இந்திய ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா எனக் கேட்டபோது, அனில் சௌகான், “விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பதை விட, ஏன் அந்த நிலை ஏற்பட்டது என்பதைக் கவனிக்க வேண்டும். அந்த அனுபவத்திலிருந்து தவறுகளை உணர்ந்தோம். அதன்பின்னர், மிகச் சரியான உக்திகளை பயன்படுத்தி, பாகிஸ்தான் மீது தொலைதூர இலக்குகளைக் குறிவைத்து வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது” எனத் தெரிவித்தார். இது மூலம், ஜெட் விமானங்கள் வீழ்ந்தது என்ற தகவலை மறைமுகமாக ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது.

இதே நேரத்தில், பாகிஸ்தான் கூறியபடி 6 விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்ற தகவலை அவர் மறுத்துள்ளார். மேலும், பாகிஸ்தான் சீனாவில் இருந்து பெற்ற ஏவுகணை மற்றும் ட்ரோன் போன்ற ஆயுதங்கள் இந்திய தாக்குதலுக்கு எதிராக செயல்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, அமெரிக்கா இந்த போரை நிறுத்த வழிகாட்டியது என்ற டிரம்ப் கூறிய கருத்தையும் அனில் சௌகான் நிராகரித்துள்ளார்.

இந்திய ஜெட் விமானங்கள் வீழ்ந்ததைக் குறித்து முப்படை தளபதி மறைமுகமாக ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதனை மேற்கோளாகக் கொண்டு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் ஜெயராம் ரமேஷ், “முப்படை தளபதி அளித்த ஒப்புதலின் பின்னணியில் பிரதமர் மோடியின் அரசும் இதனை ஒப்புக்கொள்ள முடியுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது கார்கில் போர் பின்னணியில், ஐந்து மாதங்களுக்கு பிறகு வெளியான அரசின் ஒப்புதல் அறிக்கையை நினைவூட்டுகிறது. தற்போதைய முப்படை தளபதியின் மறைமுக பதில்கள், அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை தூண்டி வருகின்றன.

 

India’s military confirmed for the first time that it lost an unspecified number of fighter jets in clashes with Pakistan in May.

Anil Chauhan, chief of defense staff of the Indian Armed Forces, spoke to Bloomberg TV on Saturday, while attending the Shangri-La Dialogue in… pic.twitter.com/9y3GW6WJfn

— Bloomberg TV (@BloombergTV) May 31, 2025