உலக சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தியவர் அலைன் டெலோன். இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர் ஆவார். இவர் பிரெஞ்சு சினிமாவின் ஸ்டைல் ஐகான் என்று கருதப்பட்டார். இவர் பர்பில் நூன், லே சாமுராய் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்தார். தற்போது இவருக்கு 81 வயது ஆகும் நிலையில் நேற்று வீட்டில் அதிகாலை காலமானார். மேலும் அவருடைய மறைவுக்கு பிரான்ஸ் அதிபர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.