
கன்னட சினிமாவில் 80’களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரீட்டா அஞ்சன். பழம்பெரும் நடிகை ஆன இவருக்கு தற்போது 68 வயது ஆகும் நிலையில் உடல் நல குறைவு காரணமாக கடந்த 13ஆம் தேதி உயிரிழந்ததாக அவருடைய குடும்பத்தினர் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இவர் ஹிந்தி பஞ்சாபி மற்றும் குஜராத்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது உடல் நலக்குறைவினால் இறந்து செய்தி திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.