முருகனின் அறுவடை வீடான பழனிக்கு  நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகிறார்கள்.  பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் பல லட்சக்கணக்கான பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வது வழக்கம். மலை அடிவாரத்தில் இருந்து மலை கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி எளிதாக செல்வதற்காக ரோப் கார் சேவை இயக்கப்பட்டு  வருகிறது. பக்தர்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு பராமரிப்பு பணிகளுக்காக மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது ரோக்கர் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரோப் காரில் எட்டு பெட்டிகளும் வண்ணங்கள் தீட்டும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் ரோப் காரில் எடை கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடந்தது. இயக்கத்தின் போது பெட்டிகள்  மோதாமல் இருக்கிறதா என்பது சரிபார்க்கப்பட்டது. இதனையடுத்து  இன்று முதல் ரோப் கார் சேவை பயன்பட்டு வருகிறது.