தமிழகத்தில் ரத்தசோகை பாதிப்பை மாணவர்களுக்கு பள்ளி அளவிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும் பரிசோதனை நடத்தவும் பொது சுகாதாரத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழக பொது சுகாதாரத்துறை சார்பாக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடம் ரத்தசோகை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் இதுவரை 8.7 லட்சம் மாணவிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் 57% மாணவர்கள் ரத்த சோகை பாதிப்புடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இடையில் ரத்த சோகை பாதிப்பை பள்ளி அளவிலேயே மாணவர்களிடம் கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தீவிர பாதிப்பு கண்டறியப்பட்ட 11,353 பேருக்கு தொடர் சிகிச்சை மூலம் இரும்பு சத்து மருந்துகள் உடலில் செலுத்தப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.