உத்திரபிரதேச மாநிலத்தில் புகழ்பெற்ற அயோத்தி ராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் உட்பட தற்போது பல கோவில்களில் தாக்குதல் நடத்துவோம் என்று காலிஸ்தான் அமைப்பு எச்சரித்துள்ளது. அதாவது தடை செய்யப்பட்ட சீக்கியர்களுக்கான அமைப்பு வெளியிட்ட வீடியோவில் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அயோத்தி ராமர் கோவில் உட்பட பல கோவில்களின் மீது தாக்குதல் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இந்து சித்தாந்தம் பிறந்த அயோத்தியின் அடித்தளம் தகர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த ‌ மிரட்டலை காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன் விடுத்துள்ளார். முன்னதாக அவர் ஏர் இந்தியா விமானங்களுக்கு மிரட்டல் விடுத்திருந்த நிலையில் தற்போது அயோத்தி ராமர் கோவிலுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இவர் மீது இந்தியா ஏற்கனவே கைதுவாரணட் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.