உத்திரபிரதேசம் மாநிலத்தில் பயிற்சி மையங்களில் சென்று படிக்கும் பெண்களுக்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் பெண்களின் படிப்பு பாதிக்கப்படும் என்று ஊடகங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது அந்த கட்டுப்பாடு விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் வளாகங்களில் பெண்களுக்காக தனியாக கழிப்பறைகள் இருக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் பயிற்சி மையங்களுக்கு வரக்கூடிய பெண்களின் பாதுகாப்பை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கல்வி நிறுவனங்களின் நுழைவாயில்கள் அனைத்திலும் மற்றும் வெளியேறும் பகுதிகள், பயிற்சி வகுப்புகள் என அனைத்து பக்கமும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக பல அநீதிகள் நடைபெற்று வரும் நிலையில் அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.