ரயிலில் செல்லும் பயணிகள் சில சமயங்களில் ஒரு ஸ்டேஷனில் டிக்கெட் புக்கிங் செய்துவிட்டு, சில காரணங்களால் வேறு ஸ்டேஷனில் இருந்து ரயிலில் ஏறுவார்கள். ரயில்வே துறை கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்கள்படி இனி இந்த நடைமுறையை நீங்கள் பின்பற்றக்கூடாது. நீங்கள் எந்த ரயில் நிலையத்தில் இருந்து சீட் புக்கிங் செய்கிறீர்களோ அதே ரயில் நிலையத்தில் தான் ஏறி உங்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் அமர வேண்டும். ஒருவேளை நீங்கள் ரயிலில் ஏறவில்லை என்றால் உங்களது சீட் RAC மற்றும் WAITING LIST-இல் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்படும்.