
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என்று நீங்களே தேர்வு செய்யும் வசதி ஒன்று உள்ளது. கீழ் பெர்த், மேல் பெர்த், சைடு பெர்த் எது வேண்டுமானாலும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் டிக்கெட் புக் செய்யும் போதெல்லாம் அதற்கான சீட் உங்களுக்கு கிடைக்காது. நிறைய பேர் ரயில் டிக்கெட் புக் செய்யும் பொழுது தங்களுக்கான சீட்டு இதுதான் என்று தேர்வு செய்வதால் பெர்த்துக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும் நமக்கு ஏதோ ஒரு பெர்த் ஒதுக்கீடு செய்யப்படும். அதாவது பெரும்பாலானவர்கள் கீழ் பெர்த் வேண்டும் என்று தேர்வு செய்யவார்கள்.
ஆனால் கீழ் பெர்த் என்பது முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். பயணிகளுடைய வசதிக்காக ரயில் பெட்டிகளில் உள்ள பெர்த் தொடர்பான சில விதிமுறைகளை இந்திய ரயில்வே வைத்துள்ளது . தொலைதூர ரயிலில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில், லோயர் பெர்த், மிடில் பெர்த், அப்பர் பெர்த் என 3 இருக்கைகள் உண்டு. இதில் மிடில் பெர்த் இருக்கைக்கு தனி விதி உள்ளது. அதில், மிடில் பெர்த்தை பகலில் கீழே எடுத்துவிட்டு தூங்கக் கூடாது, இரவில் 10 மணி முதல் காலை 6 மணி வரையே பயன்படுத்த வேண்டும், அதன்பிறகு யாரேனும் தூங்கினால் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்க சக பயணிகளுக்கு உரிமை உண்டு எனக் கூறப்பட்டுள்ளது.