ஜார்ஜாவில் உள்ள குடாரி பகுதியில் ஒரு உணவகம் உள்ளது. இந்த உணவகத்தின் 11 இந்தியர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அந்த உணவகத்தில் வேலை பார்த்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் இந்த சம்பவத்தில் வன்முறைகள் எதுவும் இல்லை. இதுகுறித்து  அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் ஹார்பன் மோனாக்சைடு என்ற விஷத்தின் காரணமாக இறந்தது தெரியவந்துள்ளது.

இந்த விஷ வாயு தாக்கியதில் அனைவரும் மூச்சு திணறி இறந்துள்ளனர். அதாவது அந்த உணவகத்தின் ஓய்வெடுக்கும் பகுதியில் 12 பேரில் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த பகுதியில் உள்ள ஒரு ஜெனரேட்டர் மின்சாரம் இல்லாத சமயத்தில் இயக்கப்பட்டபோது அதிலிருந்து விஷ வாயுத்தாக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.