போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் பண்டிகை காலத்தில் தேவையா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. பண்டிகை காலத்தில் மக்களுக்கு ஏன் இந்த இடையூறு? என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வியெழுப்பியது. இந்த வழக்கின் விசாரணையின் போது, ‘நகரத்தில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராமத்திற்குச் செல்லக்கூடிய மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். போராட்டம் நடத்த உரிமை இல்லை என கூறவில்லை, தற்போதைய பண்டிகை நேரத்தில் இந்த போராட்டத்தை நடத்துவது முறையற்றது என்றுதான் கூறுகிறோம்’ என தெரிவித்துள்ளனர்.