பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.

தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் ரூபாய் 1000 சேர்த்து வழங்கப்படும் என்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 கோடியே 19 லட்சத்து 71 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த 7ஆம் தேதிமுதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. நாளை முதல் 13ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் குறிப்பிட்ட நாளில் பொதுமக்கள் பொங்கல் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம். அதேபோல 13ஆம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பு பெற முடியாதவர்கள் 14ஆம் தேதி பொங்கல் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம்  என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் நாளை காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பை தொடங்கி வைக்கிறார்.