
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜிம் பயிற்சியாளர் ஒருவர் இளம்பெண்ணை காரில் கடத்தி சென்ற சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வைரலான வீடியோவில் ஒரு ஜிம் பயிற்சியாளர் காரில் இருக்கும் நிலையில் இளம்பெண்ணை கடத்துகிறார். அந்தப் பெண் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த ஜிம் பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
हरिद्वार में जिम ट्रेनर की शर्मनाक हरकत!
वायरल वीडियो में लड़की को कार में पकड़े दिखा
महिला सिपाही की मौजूदगी से मिली हिम्मत —
लड़की ने जिम ट्रेनर पर लगाया शोषण का आरोप।#Haridwar #GymTrainer #ViralVideo@haridwarpolice @pushkardhami pic.twitter.com/yYyuXb39Me— SACHIN CHAHAL (@SachinKChahal) April 29, 2025
இது தொடர்பாக போலீசாருக்கு இளம் பெண்ணின் சகோதரி தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணை மீட்டனர். அந்தப் பெண் போலீசாரிடம் இவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறிய நிலையில் அவர் அதனை மறுத்தார்.
அதோடு அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தன்னை நன்றாக தெரியும் எனவும் அவர் பொய் சொல்கிறார் எனவும் ஜிம் பயிற்சியாளர் கூறினார். மேலும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.