மத்திய பிரதேச மாநிலத்தில் புதிய கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் குணா தொகுதி பாஜக எம்எல்ஏ பன்னலால் சாக்யா கலந்து கொண்டார். இவர் நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிய விஷயம் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் மத்தியில் படிப்பை ஊக்குவிப்பதற்கு பதிலாக படித்து என்ன பலன் என்று பேசியுள்ளார்.

அதாவது படித்து பட்டம் பெறுவதால் எந்த பயனும் கிடையாது. அதற்கு பதிலாக பஞ்சர் பார்க்கும் கடை வைத்து பிழைக்கலாம் என்று கூறினார். மேலும் வாழ்க்கையில் படித்து முன்னேற வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவதற்கு பதிலாக அவர் பஞ்சர் கடை வைக்க வேண்டும் என்று கூறியது மாணவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.