இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘TN 07 CM 2026’ என்ற காரின் பதிவு எண் காட்சி, திரையைக் கடந்து நிஜ வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விஜய் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திரைப்படத்தில் விஜய் ஓட்டும் காரில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பதிவு எண், வெறும் கற்பனையாக இல்லாமல் ஒரு தீர்க்கதரிசன கணிப்பு போல அமைந்துவிட்டதாகக் கூறி இணையத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். திரையில் காட்டிய சிறிய விஷயம் கூட இன்று விஜய் ரசிகர்களின் உணர்வுகளோடு ஒன்றிணைந்து மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது வைக்கப்பட்ட அந்த எண் பலகையை இயக்குனர் வெங்கட் பிரபு ஃபிரேம் செய்து, விஜய்யை நேரில் சந்தித்து நினைவடைவாக வழங்கியுள்ளார். “ஒரு எண்ணத்திலிருந்து உருவான பார்வை, இன்று நிஜமான தருணமாக மாறியுள்ளது” என்ற நெகிழ்ச்சியான குறிப்புடன் அந்தச் சந்திப்பின் புகைப்படங்களையும் காட்சிகளையும் அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இந்த அன்பான செயல் மற்றும் தொலைநோக்கு எண்ணம் விஜய் ரசிகர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திரைப்படங்களில் வைக்கப்படும் சிறு சிறு குறியீடுகள் நிஜ வாழ்க்கையின் திருப்புமுனைகளுடன் பொருந்தும்போது அது தரும் சுவாரஸ்யம் அலாதியானது.
அந்த வகையில் ‘கோட்’ படத்தில் இடம்பெற்ற இந்த ‘TN 07 CM 2026’ காட்சி தற்போது இணையவாசிகளாலும் திரைத்துறையினராலும் அதிகமாகக் பகிரப்பட்டு வருகிறது. சினிமா காட்சியையும் நிஜத்தையும் இணைத்துப் பார்த்து ரசிகர்கள் கொண்டாடும் இந்த நெகிழ்ச்சியான வீடியோ பதிவு, சோசியல் மீடியா தளங்களில் தற்சமயம் பெருமளவில் ட்ரெண்டாகி வருகிறது.
