தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரியில் உள்ள கோவில்களில் நேற்று சாமி தரிசனம் செய்துள்ளார். அதன்படி முதலில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த விக்கி நயன் ஜோடி அடுத்ததாக நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் மற்றும் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்ட சுவாமி திருக்கோவில் போன்ற இடங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

அப்போது நடிகை நயன்தாராவை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் வெளியே நின்ற நிலையில் அவர்களை பார்த்து கையசைத்தவாறு அங்கிருந்து சென்றார். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் நயன் மற்றும் விக்கி ஜோடி சாமி தரிசனம் செய்தனர். மேலும் இதைத் தொடர்ந்து நயன்தாராவுடன் அங்கிருந்த ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்ட நிலையில் அவர் கடைகளுக்கு சென்று பேன்சி பொருட்கள் வாங்கிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.