இந்தியாவில் திடீர் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தில் மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்ற 45 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மாரடைப்பால் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படாரு நகரத்தைச் சேர்ந்த கேபரமின் மகனான அசோக் குமார், தமிழ்நாட்டில் தையல் வேலை செய்து வந்தவர்.

இவர், உறவினர் திருமணத்திற்காக ராஜஸ்தானுக்குச் சென்றிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று சந்தையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரெனச் சரிந்து விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாகப் பதரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், பலோத்ரா மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலையில் சரிந்து விழுந்த காட்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி!
சந்தையில் நடந்து சென்றபோது அசோக் திடீரென மயங்கி விழுந்து இறந்த காட்சி அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நீல நிற சட்டை மற்றும் வெள்ளை பேன்ட் அணிந்திருந்த அசோக், திடீரென தரையில் முகம் குப்புற விழுந்ததைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அசோக் குமாருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
<a href=”http://

“>
அவர்கள் அனைவரும் தமிழகத்தில் வசித்து வருகின்றனர். டிசம்பர் 3ஆம் தேதி தமிழகம் திரும்புவதற்காக அவர் டிக்கெட் எடுத்திருந்த நிலையில், அதற்கு முன்பே உயிரிழந்துள்ளது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவரது வீட்டில் கோவில் கும்பாபிஷேகத்திற்கான மத விழாவும் நடைபெற்று வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.