ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது.

அதன் பிறகு பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்திய போது பாகிஸ்தானின் அனைத்து முயற்சிகளையும் இந்தியாவின் பாதுகாப்பு படைகள் தகர்த்தெறிந்தன.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் கூறியதாவது, கடினமான சூழலில் உங்களுடன் இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.

நான் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தாலும் முதலில் இந்திய குடிமகன். இந்திய குடிமகனாக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எதிரிகளை அழித்த உங்களின் சக்தியை உணர நான் வந்துள்ளேன். நேரம் வரும்போது கடினமான முடிவுகளை எடுப்போம் என்பதற்கான உறுதிமொழி தான் ஆப்ரேஷன் சிந்தூர் என கூறியுள்ளார்.