இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் ஐபிஎல் தொடரில் 18 வருடங்களாக பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கிய நிலையில் விராட் கோலி மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் விராட் கோலி பெங்களூர் அணி ஜெர்சியில் கொடுத்த ஒரு பேட்டி தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது அவரிடம் நீங்கள் எந்த பாட்டை மிகவும் விருப்பப்பட்டு அடிக்கடி கேட்பீர்கள் என்று பேட்டி எடுத்தவர் கேட்டார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Karthik DP (@thedailydpk)

அதற்கு அவர் உடனே தன்னுடைய செல்போனில் நடிகர் சிம்புவின் பத்து தல திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள நீ சிங்கம் தான் பாடலை தான் அடிக்கடி கேட்பதாக கூறினார். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு தமிழ் தெரியாது. ஆனால் அவர் தமிழ் பாடலை மிகவும் விரும்பி அடிக்கடி கேட்பதாக கூறியது தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் நடிகர் சிம்பு நீ சிங்கம்தான் என்று விராட் கோலியை டேக் செய்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவும் மிகவும் வைரலாகி வருகிறது.