ஐபிஎல் 18 வது சீசன் தொடர்பானது கோலாகலமாக இந்தியா முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .20வது  லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. பரபரப்பாக சென்றிருந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியின் போது சில சுவாரசியமான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இது குறித்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாக வருகிறது. பரபரப்பாக சென்ற போட்டிக்கு மத்தியில் வீரர்களுக்கு இடையே சில சேட்டைகளும் அன்பும் வெளிப்படுவது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. அதாவது விராட் கோலி ரன் அவுட் அடிக்க முயற்சி செய்தபோது அவர்களுடைய சேட்டை கலந்த அன்பு வெளிப்பட்டது.

அதேபோல விராட் கோலி பேட்டிங் செய்த போது களத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்த சூரியகுமார் அவருடைய தோல் மீது கை போட்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பது போலவும் ஹர்திக் பாண்டியா பந்து வீசும் போது விராட் கோலியிடம் சீண்டியதும் ரசிகர்களை கவர்ந்தது. ஆட்டத்தின் முடிவில் அதிரடியாக ஆரத்திக் பாண்டிய விளையாடிக் கொண்டிருக்கும்போது அவருடைய சகோதரர் குர்னால் பாண்ட்யா பந்து வீசுவார். அந்த ஓவரில்  தொடர்ந்து ரெண்டு சிக்ஸர்களை  பறக்க விடுவார் ஹர்திக் பாண்ட்யா. அடுத்த பந்தை குர்னால் நின்று விட்டு மீண்டும்  பந்தை வீச  செல்வார் உடனே இருவரும் சிரித்துக் கொள்வார்கள். கடைசியாக 2 வீரர்களும் கைகுலுக்கி கொண்டார்கள். விராட் கோலி ரோகித் சர்மா கைகுலுக்கி கொள்வார்கள். இருவரும் கட்டி அணைத்துக் கொண்டு சிரித்தபடி செல்வார்கள். இவை அனைத்துமே ஒரே வீடியோவாக இணையத்தில் பரவி வருகிறது.