உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் மெட்டா நிறுவனம் தற்போது வாட்ஸ் அப் பயனர்களிடமும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது.

இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் whatsapp பிசினஸ் அக்கவுண்ட் வைத்திருக்கும் பயனர்களுக்கு கட்டண சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வாட்ஸ் அப் பிசினஸ் பயனர்கள் இனி மெசேஜ் அனுப்ப பணம் செலுத்த வேண்டும். ஒரு மெசேஜுக்கு 40 பைசா வரை வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.