இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று அதாவது ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் கிங்ஸை எதிர்த்து ஆர்.சி.பிக்கு அபார வெற்றியை வழங்கிய விராட் கோலி, 54 பந்துகளில் அபாரமாக 73 ரன்கள் அடித்துப் போட்டியின் ஹீரோவாக மாறினார். ஆனால் இந்த வெற்றிக்குப் பிறகு அவரது பேட்டிங்கை விட அதிகமாக பேசப்பட்டது, அவர் போட்டிக்குப் பிறகு பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ்  ஐயருடன் வாக்குவாதம் செய்ததுதான். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

வெற்றிப் பின்னணியிலும் கோலி காட்டிய கோபம் பலருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது. ரசிகர்கள் இதற்குத் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்த, “இந்திய அணி பெயருக்கே இது நல்லதில்லை” என சமூக வலைதளங்களில் விமர்சனம் பதிவு செய்துள்ளனர். சிலர் கோலியின் நடத்தை ஒரு முன்னாள் கேப்டனுக்கே உரியதல்ல என்றும், அந்த நேரத்தில் அமைதியுடன் இருந்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.