
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடந்து முடிந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது .கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலமாக மூன்றாவது முறையாக இந்த அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்நிலையில் முன்னாள் வீரர்கள் பீட்டர்சன், மேத்யூ ஹைட், அம்பத்தி ராயுடு மற்றும் தொகுப்பாளர்மயந்தி லாங்கர் ஆகியோர் விவாதித்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது அம்பதி ராயுடு கோட் நிறத்தை ஆரஞ்சிலிருந்து நீலத்திற்கு மாற்றிவிட்டார் என்று மயந்தி லாங்கர் கூறினார். இதனால் உற்சாகமான பீட்டர்சன், அம்பதி ராயுடுவை பார்த்து நான் கடைசிவரை என்னுடைய பர் ப்பில் நிறக்கோட்டை மாற்றவில்லை. “நீங்கள் ஒரு ஜோக்கர் கடைசிவரை ஜோக்கர் ஆகத்தான் இருப்பீர்கள்” என்று கிண்டல் செய்தார். அதற்கு அம்பதி ராயுடு, நான் 2 அணிகளையும் ஆதரிக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் நல்ல கிரிக்கெட்டை ஆதரிக்கிறேன் என்று சமாளித்துள்ளார்.