தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அஜித்குமார். இவரை ரசிகர்கள் தல என்று செல்லமாக அழைப்பார்கள். ஆனால் சமீபத்தில் தன்னை ஏகே என்று அழைத்தால் மகிழ்ச்சி தல என்பது வேண்டாம் என்று அஜித் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தற்போது ஏகேவாக ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளார்.

1993 ஆம் ஆண்டு வெளியான அமராவதி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தது முதல் 2023 ஆம் ஆண்டு வெளியான துணிவு படம் வரை ஏராளமான படங்களை நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தார். அஜித் அவர்களுக்கு நடிப்பை தாண்டி மிகவும் பிடித்தது கார் ரேஸ். அது எல்லோருக்கும் தெரிந்தது தான். அதோடு அவ்வப்போது பைக்கில் நீண்ட தூர பயணத்தையும் மேற்கொள்வார். இவ்வாறு தனது வாழ்க்கையை ரசித்து வாழ்பவர் அஜித்.

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சூட்டிங், கார் ரேஸ், பைக் டூர் என்று தானுண்டு தன் வேலை உண்டு என்று எந்த பஞ்சாயத்திற்கும் போகாமல் நிம்மதியாக வாழும் ஒரே ஸ்டார் என்று குறிப்பிட்டு அஜித்தின் புகைப்படத்தை இணைத்துள்ளார்.

https://x.com/tamiltalkies/status/1857733383956345065