விஜய் அவர்களின் அரசியல் பயணம் குறித்து பலரும் தங்களது யூகங்களை பல வருடங்களுக்கு முன்பாகவே கூறி வந்தனர். ஏன் விஜய் அவர்கள் கூட தான் அரசியலுக்கு வருவேன் என சூசகமாக பல மேடைகளில் பல நேர்காணல்களில் தனது அரசியல் பயணம் குறித்த கருத்துக்களை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து தெரிவித்து வந்தார். அந்த வகையில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய் அவர்கள் அரசியல் பயணம் குறித்து கத்தி திரைப்படம் வெளியான தருணத்தில் தெரிவித்து இருந்தார். அதில்

நேர்காணல் தொகுப்பாளராக இருந்த டிடி விஜய் அவர்களிடம் ஒரு ஆசையை நிறைவேற்ற கோரி நீங்கள் கேட்டால் அவரிடம் என்ன கேட்பீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு கத்தி பட கிளைமாக்ஸ் இல் அவர் உணர்ச்சிவசமாக பேசியது பலருக்கும் பிடித்த ஒன்று. எனக்கும் பிடித்த ஒன்று. அதை அவர் நிஜ வாழ்க்கையில் மேடை ஒன்றில் அதேபோல பேச வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை என தெரிவித்து இருப்பார். அதேபோல மாநாட்டில் விஜய் அவர்கள் பேசியது கத்தி படத்தின் கிளைமாக்ஸ் ஐ விட பல மடங்கு அதிகமான  பாதிப்பை தமிழக மக்களிடையே ஏற்படுத்தியிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.