சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், நடிகைகள் திரிஷா, மடோனா செபாஸ்டியன், தயாரிப்பாளர் லலித் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், விஜய் நான் கண்ணால் பார்த்த ஒரு லெஜண்ட். அவர் வாழ்க்கையில் உச்சம் தொட்டுவிட்டார். அவருடன் படம் பண்ண வேண்டும் என்பதற்காக நான் இதை சொல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.