அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலமாக பிரபலமானவர்தான் நடிகை ஷாலினி பாண்டே. இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கு மொழியில் சரளமாக பேச தெரியாதப்போதும் ஷாலினி பாண்டே இந்த திரைப்படத்திற்கு சொந்தமாக பின்னணி குரல் கொடுத்தார். 2019 அக்டோபரில் 100% காதல் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்பு தமிழில் நடிகையர் திலகம், மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார். 2020இல் ரன்வீர் சிங்வுடன் பாலிவுட்டிலும் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் உடை மாற்றும் போது இயக்குனர் உள்ளே நுழைந்ததாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அதாவது, “நான் உடைமாற்றிக் கொண்டிருந்த போது தென்னிந்திய இயக்குனர் ஒருவர்  திடீரென்று என்னுடைய அறைக்குள் நுழைந்துவிட்டார் . அந்த இயக்குனர் கேரவன் கதவை திறந்ததும் எனக்கு கோபம் வந்தது . உடனே கத்த ஆரம்பித்து விட்டேன். உடனடியாக அந்த இயக்குனர் வெளியேறிவிட்டார். “இதை பார்த்து என்னை சுற்றி இருந்தவர்கள் இயக்குனரை இப்படி கத்தக்கூடாது என்று சொன்னார்கள் என்று கூறியுள்ளார்.