பிரபல தனியார் தொலைக்காட்சியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியை சிறுவயதில் பலரும் கண்டிருப்போம். தமிழில் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் சூர்யா. அதே நிகழ்ச்சி வட மாநிலங்களிலும் நடைபெற்று இருக்கிறது. அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தவர் பாலிவுட் பிரபலம் நடிகர் அமிதாப் பச்சன் நிகழ்ச்சியில் நடுவில் போன் கால் மூலம் சில நபர்களுக்கு கால் செய்து பேசுவது வழக்கம். அந்த வகையில் ,

அமிதாபச்சன் கால் செய்து ஒரு நபரிடம் பேசுகையில், நான் அமிதாபச்சன் பேசுகிறேன் என கூறுவார். அதற்கு எதிர்முனையில் இருக்கக்கூடிய நபர் இதை பிராங் கால் எனவும்,  தன்னை யாரோ கிண்டல் செய்வதாக நினைத்து அமிதாபச்சன் பேசுகிறீர்களா? நான் ஷாருக்கான் பேசுகிறேன் என கிண்டலாக பதில்  பதிலளித்து இருப்பார். இது சில வருடங்களுக்கு முன்பு நடந்தது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.