நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனவரி 31ஆம் தேதி உரையாற்றியிருந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில், விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் 2.80 லட்சம் கோடி உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. ஊழல்வாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் இப்போது ஏழைகளின் கையில் ஜொலிக்கிறது.

அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் இருந்து கட்டு கட்டாக பணம் பிடிபடுவது எப்படி? அமலாக்கத்துறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கட்டு கட்டாக பணம் பிடிபிடும்போது என்ன பதில் அளிப்பர். நாட்டை கொள்ளை அடிக்க விடமாட்டேன், கொள்ளையடித்த பணத்தை திரும்ப பெறாமல் விடமாட்டேன். பாஜக ஆட்சியில் 1 லட்சம் கோடியை அமலாக்கத்துறை கைப்பற்றி உள்ளது.

பயனாளிகளின் வங்கி கணக்கில் நாங்கள் நேரடியாக பணத்தைக் கொண்டு சேர்க்கிறோம். 2 போர் நடக்கும் போதும் கொரோனா காலத்திலும் பணவீக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். என் மீது உங்கள் கைகள் வீசும் செங்கல்லை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவேன். எவ்வளவு தாக்குதல் தொடுக்கப்பட்டாலும் ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். நாட்டை பலமுறை துண்டாடிய சக்திகள் மீண்டும் துண்டாட முயற்சி செய்வதாக கூறினார்.