நாடு முழுவதும் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளும் வரும் சுதந்திர தினத்தன்று அனைத்து வளர்ச்சிப் பணிகளுக்கும் வருவாய் சேகரிப்புக்கும் டிஜிட்டல் கட்டணத்தை கட்டாயமாகப் பயன்படுத்தும், மேலும் அவை UPI மயமானதாக அறிவிக்கப்படும் என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று மாநிலங்கள், முதலமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் போன்ற முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் UPI மயமான பஞ்சாயத்துகளை மாநிலங்கள் அறிவித்து திட்டத்தை தொடங்க வேண்டும் என்று மத்திய அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.