இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பலரும் குடிநீர் வரி மற்றும் வீட்டு வரி போன்றவற்றை மின்னணு முறையில் செலுத்தி வருகின்றனர். அவரைப் போலவே மின்சார கட்டணமும் ஆன்லைன் மூலமாக பலரும் செலுத்தி வருகிறார்கள். இருந்தாலும் ஊராட்சிகளில் குடிநீர் வரி, வீட்டு வரி மற்றும் நில வரி உள்ளிட்ட பல்வேறு வரி மற்றும் கட்டணங்களை மக்கள் பணமாக செலுத்துகின்றனர்.

இதனால் மத்திய அரசு அனைத்து ஊராட்சிகளிலும் மின்னணு முறையில் பணம் செலுத்துவது கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது. இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் மின்னணு முறையில் பணம் செலுத்தும் முறை கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் அனைத்து ஊராட்சிகளிலும் யூ பி ஐ வசதி கொண்ட ஊராட்சிகளாக அறிவிக்க வேண்டும் எனவும் இதனை முதல்வர், எம்பி மற்றும் எம்எல்ஏ போன்ற முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் தொடங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.