மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும், திரிபுராவில் பிப்ரவரி 16 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையும் மார்ச் 2 ஆம் தேதியே நடைபெற உள்ளது. இதனை அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாகாலாந்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறப்பிடம் பெறும் கல்லூரி மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். மேலும்  அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் தாய், சேய் பராமரிப்புக்காக தனிப்பிரிவு அமைக்கப்படும். மத்திய அரசின் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 2 கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். முதுநிலை பட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என கூறியுள்ளார்.