
நடிகை பாவனா தெலுங்கு, தமிழ், மலையாளம் கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்தவர். விறுவிறுப்பாக அனைத்து மொழி படங்களிலுமே நடித்து வந்தார். இதற்கிடையில் திடீரென்று தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு படங்களில் அவர் நடிக்கவில்லை . குடும்பம், குழந்தை என செட்டில் ஆகிவிட்டார். சோஷியல் மீடியா பக்கமும் எந்தவொரு புகைப்படங்களையும் பகிர்வதில். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தனக்கு வரும் மோசமான கமெண்ட் குறித்து நடிகை பாவனா பேசியுள்ளார்.
அதாவது, “நானும் என்னுடைய கணவரும் தினமும் ஜோடியாக போட்டோ போட்டு கொண்டு இருக்க மாட்டோம். அப்படி போடுவது கிரின்ச்சாக இருக்கும். எனக்கு பிடிக்காது. அதையும் மீறி ஏதாவது புகைப்படம் போட்டால் இது பழைய புகைப்படம் இரண்டு பெரும் பிரிந்து விட்டார்கள் , விவகாரத்தை செய்யப் போகிறார்கள் என்று கமெண்ட் செய்வார்கள். இப்போதைக்கு நானும் என் கணவரும் நல்லா தான் இருக்கிறோம். அப்படி ஏதாவது பிரச்சனை வந்தால் நானே சொல்கிறேன்” என்று கூறியுள்ளார்.