தமிழில் களவாணி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகும் மன்மதன் அன்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மதயானை கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் வரிசையாக நடித்து வந்தார். பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதையடுத்து விஜய் டிவியில் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு மக்களின்  ஆதரவை பெற்றார். அந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியது.

 

View this post on Instagram

 

A post shared by Oviya (@happyovi)

இந்த சீசனில் தான் இவருக்கு ஓவியா ஆர்மியையும் தொடங்கினார்கள். இந்த நிலையில் 2019 ஆம் வருடத்திற்கு பிறகு தமிழில் ஒரு படம் கூட நடிக்காத ஓவியா 2024 ஆம் வருடம் பூமர் அங்கிள் படத்தில் நடித்தார். ஆனால் எதுவுமே சரியாக ஓடவில்லை. இந்த நிலையில் புதிய படம் ஒன்றின் பூஜை வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவருக்கு நல்ல படம் அமைய வேண்டும். நல்லவற்றை கொடுக்க வேண்டும் என்று மனதார பாராட்டி வருகிறார்கள்.