ஆந்திராவில் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பொதுமக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை வழங்கினார். அந்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வரும் நிலையில் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது நலவாழ்வு ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் 3000 ரூபாய் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

தற்போது நலவாழ்வு ஓய்வூதியதாரர்கள் 200700 ரூபாய் ஓய்வூதியமாக பெற்று வரும் நிலையில் தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை போல ஓய்வூதிய மூவாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் முதியோர் ஓய்வூதியம் பெறுவோர், விதவைகள், நெசவாளர்கள், கல்வெட்டுபவர்கள், ஒற்றைப் பெண்கள், பாரம்பரிய செருப்பு தொழிலாளிகள் மற்றும் எச்ஐவி நோயாளிகள் என அனைவருக்கும் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.