
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சுரேஷ் கோபி. இவர் தமிழ் சினிமாவிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதி எம்பி ஆக வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு பாஜக கட்சி மந்திரி பதவி கொடுத்தது. இந்நிலையில் சுரேஷ்கோபி 22 படங்களில் கமிட் ஆகியுள்ள நிலையில் தொடர்ந்து படங்களில் நடிக்க அனுமதி வேண்டும் என பாஜக மேலிடத்திற்கு கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் அந்த கடிதத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மத்திய இணை மந்திரி சுரேஷ்கோபி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நடிப்புதான் என்னுடைய பேஷன். சினிமா மட்டும் இல்லை எனில் நான் இறந்து விடுவேன். 22 படங்கள் முடிக்க வேண்டியுள்ளது என அமித்ஷாவிடம் கூறிய போது அந்த பேப்பரை தூக்கி வீசினார். நான் திருச்சூர் மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகத்தான் மந்திரி பதவியை ஏற்றுக்கொண்டேன். படப்பிடிப்பின் போது 4 அதிகாரிகள் என்னுடன் இருக்க வேண்டும். அதற்கான செலவை படத்தின் தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் படங்களில் நடிக்க கூடாது என எனக்கு அழுத்தம் வந்தால் நான் மகிழ்ச்சியுடன் மந்திரி பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று கூறியுள்ளார்.