
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மடோனா செபஸ்டியன். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான காதலும் கடந்து போகும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு கவண், லியோ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்துவரும் நிலையில் சமீப காலமாக சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். படங்களில் ஹோம்லியாக நடிக்கும் மடோனா தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த வகையில் தற்போது கடற்கரையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.