
பிரபல கன்னட நடிகர் யுவராஜ் குமார் மறைந்த பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் பேரன். யுவராஜ்குமாருக்கும் ஸ்ரீதேவி பைரப்பா என்பவருக்கும் கலந்து 2019 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது. சில வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பெரிய முடிவு செய்துள்ளனர்.
இதில் ஸ்ரீதேவி யுவராஜ் குமாருக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீசில், யுவராஜ் குமாருக்கு சக நடிகையுடன் தகாத உறவு இருப்பதாகவும் இருவரும் ஓட்டல் அறையில் ஒன்றாக இருந்தபோது பார்த்து விட்டதால் தன்னை அடித்து வெளியே தள்ளி விட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ஏழு வருடங்கள் காதலை சேர்த்து திருமணம் செய்து கொண்ட இருவரும் தற்போது விவாகரத்து என வந்து நிற்பது யுவராஜ் குமார் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.