
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்காக 200 கோடி சம்பளம் வாங்கியதாகவும் அவருடைய கடைசி படமான தளபதி 69 படத்திற்காக 250 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் பூவே உனக்காக, ஷாஜகான் மற்றும் திருப்பாச்சி உட்பட 7 படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜய் இதுவரை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் போது சம்பளம் பற்றி பேசியதே கிடையாது என திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார். அதோடு இளம் ஹீரோக்கள் நடிகர் விஜய்யை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் இதன்மூலம் நடிகர் விஜய்யின் சம்பளம் குறித்து பரவிய தகவல்கள் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.