இன்று  சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பில் பெற்றோரை இழந்த 12ஆம் வகுப்பு மாணவர்களின் மேல்படிப்புக்கு  கல்வி உதவி தொகையை நடிகர் சூர்யா  வழங்கினார். இதற்கான விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் சூர்யா, சிவக்குமார், கார்த்தி என பலரும் பங்கேற்றனர். அந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா, அகரம் மூலம் 5200 மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற 14 வருடங்கள் ஆனது. ஆனால் தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிக்கும்போது கடந்த 3 வருடங்களில் 1 லட்சம் மாணவர்களுக்கு உதவ முடிந்தது என்றார்.

முதலிடம் பெற்ற மாணவர்கள் என்று பார்க்காமல், எந்த மாதிரியான சூழலில் கல்வி கற்று, மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்கள் என்று பார்த்து உதவி செய்கிறோம்” என்று பேசினார். சமீபத்தில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் உதவி செய்ததால் சூர்யா அதனை சுட்டிக் காட்டி பேசுகிறார் என்று இணையத்தில் விமர்சனங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.